Friday, June 24, 2016

ஒரு குப்பைத்தொட்டிக்கான முயற்சிகள்

20-ஜூன்-2016

வடக்குப்பட்டுச் சாலையில் சகுந்தலா மருத்துவமனை அருகில் எப்பொழுதும் குப்பைக்கிடங்கு போலவே குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் இப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு உருவாகும் அபாயம் உள்ளது. மேடவாக்கம் பேரூராட்சி சார்பாக இங்கு ஒருக் குப்பைத்தொட்டி அமைத்து குப்பைகளை அகற்ற நாம் பேரூராட்சித் தலைவர் மற்றும் ஆணையருக்கு தபால் மூலம் விண்ணப்பித்தோம். மேலும் நமது கோரிக்கைக்கு வழுச்சேர்க்க செய்தித்தாள்களுக்கும் (Times of India, தமிழ் ஹிந்து, தினமலர் மற்றும் தினமணி) கோரிக்கை விடுத்தோம்.


நன்றி: Google Maps


நமது கோரிக்கை "தமிழ்-ஹிந்து"வில் (24-ஜூன்-2016) ...


இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரே தெரியவருகிறது. குறிப்பிட்ட இடம் கோவிலம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லை என்பது. மீண்டும் கோவிலம்பாக்கம் ஊராட்சித் தலைவர் மற்றும் ஆணையருக்கு விண்ணப்பித்தோம்.

நமது கோரிக்கை "Times of India"வில் (28-ஜூன்-2016) ...



நமது கோரிக்கையை ஏற்ற பஞ்சாயத்து அவ்வப்பொழுது குப்பைகளை அள்ளினாலும் ...


குப்பைத்தொட்டி வைக்கப்படாததால் ... அப்பகுதி மக்கள் மீண்டும் குப்பைகளைக் கொட்டி பழையப்படி மீண்டும் குப்பைக்குவியலாகவே...  

நாம் குப்பைத்தொட்டி பெறுவதற்கு தொடர்ந்து முயல்வோம்.

Monday, June 13, 2016

"தடா" அருவியில்

கடந்த சனிக்கிழமையன்று "தடா" அருவியில் நண்பர்களோடு மகிழ்ந்திருந்தாலும் ஒரு சிறிய இடைவெளியில், நாவல் பழங்களை அங்கொன்று இங்கொன்றாய் தூவினோம். ஒன்று துளிர்விட்டாலும் மிக்க மகிழ்ச்சியே.

அப்படியே பாலிதீன் மற்றும் மக்காத தண்ணீர் பாட்டில்களையும் நம்மால் முடிந்த அளவு சேகரித்தோம்.

தயவு செய்து பொது இடங்களில் குப்பைகளை எறியாதீர்.



Sunday, June 5, 2016

மக்காதக் குப்பைகளை சேகரித்து

மக்காதக் குப்பைகளை சேகரித்து அகற்றினோம்.