Saturday, July 30, 2016

கைலாஷ கோனே அருவியில் நமது பணி

கைலாஷ கோனே அருவி செல்லும் வழியில் வயல்வெளி ஓரத்தில் அமர்ந்து காலை உணவை உண்டோம்.

நமக்கு முன்னரே அவ்விடத்தில் பலர் உண்டு அவ்விடமெங்கும் குப்பைகள் .... காலை உணவு உண்டப் பின் அவ்விடத்தை நம்மால் முயன்ற அளவு குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம்.



கடந்த முறை தடா அருவியில் நாவல் பழங்களைத் தூவினோம் விதைகளுக்காக ... இம்முறை ஆங்காங்கே குழிவெட்டி புதைத்தோம் ... ஏதேனும் ஒன்று துளிர் விட இயற்கை மழை பொழியட்டும் ....




Thursday, July 28, 2016

பாலீத்தின் குப்பைகள்

புதிதாக நட்ட மரக்கன்றை சுற்றி மண் சரிவை.... நன்கு சரி செய்து ... வழக்கம் போல் குவியும் மக்காத பாலீத்தின் குப்பைகளை அகற்றி ....



Monday, July 25, 2016

கூட்டு முயற்சி

மேடவாக்கம் வடக்குப்பட்டு எரிக்கருகில் கட்டுமானப்பணியில் இருக்கும் தனியார் பள்ளியொன்றின் பணியாளர்கள் ... குவித்த கட்டுமான பாலீத்தின் / மக்காதக் குப்பைகள்.



இதுகுறித்து நாம் பள்ளி தலைமைக்கு தெரியப்படுத்தி குப்பைகளை அகற்ற அறிவுறுத்தினோம். அவர்களும் பெரும்பான்மையான குப்பைகளை அகற்றினர்.

அவர்களுக்கு நமது நன்றிகளும், வணக்கங்களும்!!!

மீதமிருந்த சில குப்பைகளை அகற்றி புதிய மரக்கன்று (செம்மயிர்கொன்றை) ஒன்றை நட்டோம்.




Saturday, July 23, 2016

புது வரவு

தொலைத்தொடர்பு கம்பி பதிக்க குழி வெட்டியவர்கள் மரத்தின் வேரை வெட்ட, பெருமழையோ மரத்தை சாய்க்க ... மரம் மொத்தமாக பட்டுவிட்டது.

அதை அகற்றிவிட்டு புதிய மரங்கன்றை நட எண்ணி, மரத்தை வெட்ட முயற்சித்தோம். காய்ந்த மரமென்றாலும் மிக உறுதியாய் இருந்ததால் ... மரத்தை வெட்டும் முயற்சியை கைவிட்டு புதிய மரக்கன்றை (புங்கை மரம்) நட்டோம்.





மேலும் கால்நடைகள் கடிக்காமலிருக்க ... சீமைக்கருவேல முள்வேலியிட்டாயிற்று.

அப்படியே சில பராமத்துப் பணிகள் ...