Monday, June 30, 2014

மழையும் விபத்தும்

2 நாட்களாய் பெய்த மழையினால் மரக்கன்றுகளுக்கு நீர் தெளிக்கத் தேவையில்லை என நினைக்கும் முன், ஏதோ ஒரு வாகனம் ஒரு மரக்கன்றினை நூலிழையில் தவற விட்டு வேலியினைத் தாறுமாறாக மோதி விபத்து நடந்து விட்டது.

வேலியினையும், களைச் செடிகளை பிடிங்கி உரமாய் போட்டு பாத்திக் கட்டியாயிற்று.



Monday, June 16, 2014

எங்கும் குப்பைகளே

எத்துனை முறை சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும்
எங்கும் குப்பைகளே ...




Monday, June 9, 2014

கோடை மழை

புதிய மரக்கன்றினை ஆடு கடித்து வெறும் நடுத்தண்டு மட்டுமே எஞ்சியிருந்தது.

கோடை மழை பெய்து அக்னியின் வெக்கை சற்றே தணிந்தது. மழையின் குளுமை மனதிற்கு இதமாயிருக்கையில், புதிய மரக்கன்று மீண்டும் துளிர் விட்டது மனதிற்கு மேலும் ஆனந்தமாயிற்று.

விளம்பர பாதாதைகளையும், சீமைக்கருவேல முட்களையும் வெட்டி வேலி அமைத்தாயிற்று!


கருவேல செடிகளைக் கண்டால் முடியும் பொழுதெல்லாம் வேரோடு வெட்டுங்கள். ஒரு மரத்‌தினை வெட்டியெறிவதற்குள் உள்ளங்கை தோல் கிழிந்து உதிரம் உதிரலாயிற்று. 


முன்பு வெட்டிய மரம் மீண்டும் துளிர்க்கலாயிற்று. இம்முறை வேரோடு வெட்டி அப்புறபடுத்தியாயிற்று.






சீமைக் கருவேலம்


சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்

பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனைக் களைய பல அரசு மற்றும் தன்னார்வள தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், பச்சை நிறக்காய்களையும் முதிர்ச்சியில் மஞ்சளாக மாறிவிடும். இதன் வேர் நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீலம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

தீமையின் பட்டியல்கள்
  1. விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.
  2. அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியே ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது.
  3. நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.
  4. புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
  5. நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு
  6. இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.