Sunday, November 13, 2016

பனை நடவும், சில பராமத்து பணிகளும்

மீதமிருந்த பனை பழங்களை ஏரிக்கரையில் நட்டோம்.




இதுவரை ...

நாள் (தேதி)
நட்ட பழங்களின் எண்ணிக்கை
Aug-16
46
Sep-16
46
Nov-16
12
மொத்தம்
104

(பழத்திற்கு 2-3 விதைகள்/கொட்டைகள் வீதம் இருக்கும்.)

வேம்புவை துளிர்க்க விடாமல் மக்கள் அடிக்கடி கிள்ளி விடுவதால் ... முள் வேலி!


நுணாக் கிளைகளை கழித்து வழக்கம் போல்  மக்காத பாலீத்தின் குப்பைகளை சேகரித்து அகற்றினோம்.


Thursday, October 6, 2016

சாலை/பாலம் சீரமைக்க (பகுதி-2)

தில்லை கங்காநகர் சுரங்கபாதையை சரிசெய்ய ... நமது முயற்சி!





Tuesday, October 4, 2016

சாலை/பாலம் சீரமைக்க சென்னை மாநகராட்சியிடம் விண்ணப்பம்

"மியாட் மருத்துவமனை அடையாறு பாலம் - ராமாபுரம்" குண்டும் குழியமாக சேதமடைந்திருப்பதால் இரவு அல்லது மழை நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.


இதுக் குறித்து நாம் சென்னை மாநகராட்சிக்கு Online ல் விண்ணப்பித்தோம்.


புகாரின் அடிப்படையில் சாலை/பாலம் சீரமைக்க ஆவணம் செய்த சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு நமது நன்றிகள். சாலை சீரமைக்கப்பட்டபின் ...


Sunday, September 18, 2016

கீழ்கட்டளை ஏரிக்கரையில்

இரண்டு சாக்குப்பைகளில் சேகரித்த 30 பனம்பழங்களை கீழ்கட்டளை ஏரிக்கரையில் நட வீட்டிலிருந்து கடப்பாரை, மண்வெட்டி, பனம்பழங்கள் என இரு சக்கர வாகனத்தில் மூட்டை முடிச்சுகளோடு ....


ஏரியின் வட பாதியில் (எரியின் மீது தான் சாலையே இருக்கிறது) கிழக்குக் கரையில் ஓரளவு பனைமரங்கள் இருப்பதால்


ஏரியின் தென் பாதியின் வடக்கரையில் பனம்பழங்களை நட்டோம்.







இதுவரை ... (பழத்திற்கு 2-3 விதைகள்/கொட்டைகள் வீதம் இருக்கும்.)

நாள் (தேதி)
நட்ட பழங்களின் எண்ணிக்கை
Aug-2016
46
6-Sep-16
16
18-Sep-16
30
மொத்தம்
92
 
அத்தோடு யாரோ நட்ட மரக்கன்றுகளைச் சுற்றியுள்ள களைச் செடிகளையும் அகற்றினோம்.






Sunday, September 11, 2016

சிலப்பல பராமத்துப்பணிகள்

மரக்கன்றுகளுக்கு குச்சிக் கட்டி, களைச்செடிகளை அகற்றி, மரவேலிகளில் குப்பைகள் (பூக்களை பாலித்தீன் பைகளோடு) போடாமலிருக்க அறிவிப்புப் பலகை வைத்து ... சிலப்பல பராமத்துப்பணிகள்!!!








Tuesday, September 6, 2016

விழிப்புணர்வு வருமா?

குப்பைகளை அகற்றி ஓர் அறிவிப்பு பலகை... விழிப்புணர்வு வருமா குப்பைப் போடுபவர்களுக்கு??? பொறுத்திருந்துப் பார்ப்போம்.




அறிவிப்புப்பலகையில்: இங்கு ATM குப்பைகளை போடாதீர்கள். குப்பைகளை குப்பைத்தொட்டியில் மட்டுமே போட பழகுவோம்.

குப்பைகளை போடாமலிருக்க அறிவிப்புப் பலகை வைத்ததால் சற்றுத் தள்ளி குப்பைகள், இவர்களை எவ்வாறு மாற்ற???




அறிவிப்புப்பலகையில்: குப்பைகளை குப்பைத்தொட்டியில் மட்டுமே போட பழகுவோம்.

Saturday, September 3, 2016

பனம்பழங்கள் நடவு

மழை அவ்வப்பொழுது பெய்வதால், பனம்பழங்கள் நன்கு பழுத்து கொட்ட ஆரம்பித்துள்ளன. நம்மால் முடிந்த அளவு சேகரித்து நட்டு வருகிறோம்.






நாம் தற்சமயம் இதுவரை நட்டுள்ள பகுதிகள்.









இதுவரை ...

நாள் (தேதி)
நட்ட பழங்களின் எண்ணிக்கை
7-Aug-16
5
22-Aug-16
7
24-Aug-16
8
25-Aug-16
6
27-Aug-16
14
30-Aug-16
6
6-Sep-16
16
மொத்தம்
62

பழத்திற்கு 2-3 விதைகள்/கொட்டைகள் வீதம் இருக்கும்.