எல்லோரையும் போல் எமக்கும் ஆற்றாமை அதிகமே ! உலக வெப்பமயமாதல் குறித்தும், மழையின்மைக் குறித்தும் !! ஆனால் செயலில் சூன்யமாய் இருப்பதில் பயன் என்ன?
Saturday, February 18, 2017
Sunday, February 12, 2017
சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் இளைஞர்கள்!
சீமைக் கருவேல மரங்களின் தீமைகளை உணர்ந்து மேடவாக்கம் (வடக்குப்பட்டு) எரிக்கரையிலுள்ள சீமைக் கருவேல மரங்களை தன்னார்வல இளைஞர்கள் அகற்றும் பணியில் தீவிரமாய் தொடங்கியுள்ளனர். நாமும் அவர்களோடு முடிந்த அளவு சேர்ந்து பணியாற்றினோம்.
புதுவரவு (நண்பருக்காக)
நமது நண்பர் ஒருவருக்காக, புதியதாக நட்ட நெல்லி மரக்கன்று.
மாங்கன்று
யாரோ நட்ட அரச மற்றும் வேம்பிற்கு வேலியிட்டு, வழக்கம்போல பாலீத்தின் குப்பைகளை அகற்றினோம்..
Saturday, January 28, 2017
மண் சரிவை சீர்செய்தும், குப்பைகளை அகற்றியும்!
தனியார் பள்ளி வளாகத்திற்கு எதிரே புதியதாய் உயரமாய் பள்ளி சார்பாக மரக்கன்றுகள் (மரங்கள்) நட்டுள்ளனர். நாம் நட்ட மரங்களைச் சுற்றி சரிந்த மண்ணை நாம் சீர் செய்து, எப்பொழுதுமே குவியும் குப்பைகளை அகற்றினோம்.
Sunday, January 22, 2017
Sunday, January 15, 2017
வர்தா புயலுக்குப்பின்
நடா புயலால் பெரியதாக எந்த பாதிப்பில்லை என்றாலும், அடுத்து வந்த "வர்தா" புயல் சென்னையைப் புரட்டிப்போட்டது. மேடவாக்கம் வடக்குப்பட்டு எரிக்கரையிலுள்ள அநேக மரங்களை வேரோடு சாய்த்தது. அதோடு நாம் நட்ட சில மரக்கன்றுகளும் புயலால் சேதமடைந்தது.
மீண்டும் நமது பணிகள் முதலிலிருந்து ...
மரத்தை சுற்றி பாத்தியை சரிச் செய்து, களைச் செடிகளை அகற்றி ... அத்துடன் மக்காத குப்பைகளைச் சேகரித்து அகற்றினோம்.
"வர்தா" புயல் பாதிப்புகளில் சில
மீண்டும் நமது பணிகள் முதலிலிருந்து ...
மரத்தை சுற்றி பாத்தியை சரிச் செய்து, களைச் செடிகளை அகற்றி ... அத்துடன் மக்காத குப்பைகளைச் சேகரித்து அகற்றினோம்.
"வர்தா" புயல் பாதிப்புகளில் சில
Sunday, November 13, 2016
பனை நடவும், சில பராமத்து பணிகளும்
மீதமிருந்த பனை பழங்களை ஏரிக்கரையில் நட்டோம்.
இதுவரை ...
|
நாள் (தேதி)
|
நட்ட பழங்களின் எண்ணிக்கை
|
|
Aug-16
|
46
|
|
Sep-16
|
46
|
|
Nov-16
|
12
|
|
மொத்தம்
|
104
|
வேம்புவை துளிர்க்க விடாமல் மக்கள் அடிக்கடி கிள்ளி விடுவதால் ... முள் வேலி!
நுணாக் கிளைகளை கழித்து வழக்கம் போல் மக்காத பாலீத்தின் குப்பைகளை சேகரித்து அகற்றினோம்.
Subscribe to:
Posts (Atom)





























