Sunday, May 25, 2014

பாலித்தீன் பிசாசு

நெகிழி (பாலித்தீன்)

நெகிழிப் (பாலித்தீன்) பைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன. தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது. நெகிழி உறைகள் சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது.

எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சக்கடைகள் ஆகியவைகளில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துர்நாற்றம், கொசுவளர்ப்பு, நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன.
மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை. ரெசின் துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், கடல் ஆட்டர், டால்பின், கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில், மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன. நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது.

ஏதோ நம்மால் முடிந்த அளவு பாலித்தீன் குப்பையினை (7-8 சாக்கு பைகள்) சேகரித்து அகற்றினோம்.








No comments:

Post a Comment