Sunday, August 7, 2016

பனைமரம்

வழக்கம் போல் குவியும் பாலீத்தின் குப்பைகளை சேகரித்து அகற்றினோம், எருக்கு மற்றும் களைச்செடிகளை வெட்டி அகற்றினோம்.


மரத்திலிருந்து விழுந்த பனங்காய்களை நட்டு வைத்தோம்.



பனம்பழம் / பனங்கொட்டையிலிருந்தே பனை வளரும் எனத் தெரியவருகையில் ... ஐயா "நம்மாழ்வார்" கூற்றை நாம் கருத்தில் கொண்டோம்.

"விதைத்துக் கொண்டே இருங்கள்...
முளைத்தால் மரம் ... இல்லையென்றால் உரம்"

பனை பற்றிய ஓர் குறிப்பு

கிராமம் என்றால் நீர்நிலை இருக்கும். அதை சுற்றி ஆல், அரசு, வேம்பு மரம் இருக்கும். கண்மாய் அமைத்து மழைநீரையும் சேமித்தனர். கண்மாய்கரையில் உயரமாக வளரும் தன்மை உடைய பனைமரங்களை நட்டனர். இது கரைக்கு உறுதிதன்மை கொடுத்தது.
மழை காலத்தில் கரையை உடைத்து தண்ணீர் வீணாவதும் தடுக்கப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், "பனைமரத்திற்கு குளிர்மேகங்களை ஈர்க்கும் தன்மை உண்டு. கண்மாயை சுற்றி பல மரங்கள் இருப்பதால் கடந்து செல்லும் குளிர்மேகங்களை ஈர்த்து அங்கு மழை பெய்ய செய்யும்,' என்கின்றனர். கண்மாய் நிரம்பும்போது நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கப்பட்டது.

இந்த முறைகள் பல ஆண்டுகளுக்கு முன் மாறிய நிலையில் ரோடு அமைக்க, கண்மாயை பலப்படுத்த அரசு அமைப்புகளே மரங்களை வெட்ட துவங்கின. தற்போது மழை பெய்யும் அளவு குறைந்ததால் மரங்களின் முக்கியத்துவத்தை அரசு, மக்கள் புரிந்துகொண்டனர். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என திட்டமிடப்பட்டு, அதன்படி மக்களும் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட துவங்கி உள்ளனர்.

பொதுவாகத் தாவரங்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை, பப்பாசி என்பனவற்றில் ஆண் பனை, பெண் பனை, ஆண் பப்பாசி, பெண் பப்பாசி என்று தனித்தனி மரம் உண்டாகி வளர்கின்றன. ஆண் பனையும், ஆண் பப்பாசியும் முதிர்ச்சியடைந்ததும் பூத்துக் குலுங்குவதுடனே தமது வாழ்நாளைக் கடத்தி வருகின்றன என்றும் கூறலாம். காய், பழம், விதை என்பவற்றை இவற்றிலிருந்து பெறுவது முடியாத காரியமாகும்.

No comments:

Post a Comment